Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“இதோட அட்டகாசம் தாங்க முடியல” நாசமான பயிர்கள்…. வேதனையில் விவசாயிகள்….!!

காட்டுப்பன்றிகள் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கீழவடகரை பகுதியில் நல்லதம்பி, பாலன் என்பவர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பூலாங்குளம் பத்துகாட்டில் சொந்தமான விளை நிலங்கள் அமைந்துள்ளது. அதில் அவர்கள் வாழை மற்றும் நெல்களை பயிர் செய்துள்ளனர். இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து காட்டுப்பன்றிகள் கூட்டம் வெளிவந்து அவர்களது விளை நிலங்களில் புகுந்து 100-க்கும் மேற்பட்ட வாழை மற்றும் பயிர்களை சேதப்படுத்தி சென்றுள்ளது. இதில் சேதமடைந்த வாழைகள் 5 மாதங்களான ஏத்தன் ரக வாழைகள் ஆகும். இதனால் விவசாயிகளுக்கு பெரிதளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் விவசாயிகள் அப்பகுதியில் தற்போது கடமான், சிறுத்தை, காட்டுப் பன்றி, கரடிகள் உள்ளிட்ட விலங்குகள் அட்டகாசம் செய்து வருவதாக புகார் தெரிவித்துள்ளனர். மேலும் விளைநிலங்களில் இரவு நேரங்களில் வனவிலங்குகள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எனவே விவசாயிகள் வனவிலங்குகள் விளை நிலங்களுக்குள் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நாசமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உள்ளிட்ட கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |