தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு முதல் கட்டமாக 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.அதனைத் தொடர்ந்து நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வரை பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் 1 முதல் முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வீடு தேடி பள்ளிகள் என்ற திட்டத்தை விரைவில் அமல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக சென்னையில் அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு ஆசிரியரும் தங்களது பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பகுதிக்குச் சென்று அங்குள்ள மாணவர்களை ஒருங்கிணைத்து தினசரி 2 மணி நேரம் பாடங்களை நடத்தவும் மற்றும் மாணவர்களின் கற்றல் குறைபாட்டை தீர்க்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு பள்ளிகள் திறக்க பட்டாலும் மாலை நேரங்களில் மாணவர்கள் இருப்பிடம் சென்று பாடம் நடத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் பணி செய்வதே தொடக்க கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.