கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்த வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிவகாசியிலிருந்து நாரணாபுரம் பகுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மாரீஸ்வரன் மற்றும் சபரீஸ்வரன் வேல்முருகனை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்து 200 ரூபாய் பணத்தை பறித்து சென்றுள்ளனர். இது குறித்து வேல்முருகன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சபரிஸ்வரன் மற்றும் மாரிஸ்வரனை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து சையது சுல்தான் என்பவர் சித்துராஜபுரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ராக்கையாபாண்டி என்பவர் சையது சுல்தானிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து சென்றுள்ளனர். இது குறித்து சையது சுல்தான் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ராக்கையாபாண்டி என்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.