குற்ற செயல்களில் ஈடுபட்ட 2 நபர்களை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பூந்துறைரோடு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் நாவல் அடியார் பகுதியினை வசித்து வரும் நாசர் என்பது தெரியவந்தது. இவர் லாட்டரி சீட்டை விற்றதும் காவல்துறையினருக்கு தெரியவந்தது.
இதனையடுத்து நாசரை காவல்துறையினர் கைது செய்ததோடு அவரிடமிருந்த 11 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். இதேபோன்று முள்ளாம்பரப்பு பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு இந்த சீட்டு விற்பனை செய்ததாக வாய்க்கால்மேடு பகுதியை சேர்ந்த எத்திராஜ் என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 16 லாட்டரி சீட்டுகள், ஒரு மொபட்மற்றும் 550 ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.