வாக்காளர்களுக்கு மின்விசிறி வழங்குவதற்காக பதுக்கி வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6-ஆம் தேதி மற்றும் 9-ஆம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் கொடுப்பதை தடுக்க தீவிரமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்பின் மிலாரிப்பட்டு கிராமபுறத்தில் வாக்காளர்களுக்கு தேர்தல் நேரம் என்பதால் பரிசாக வழங்குவதற்கு மின்விசிறிகள் பதுக்கி வைத்திருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் படி பறக்கும் படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று மணிகண்டன் மற்றும் ரகோத்தமன் ஆகிய இரண்டு பேரின் வீடுகளிலும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அட்டை பெட்டிகளில் நூறு மின்விசிறிகள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து இந்த மின்விசிறிகளை வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பதுக்கி வைத்திருந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. பின்னர் மின்விசிறிகள் அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.