சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அருள் ஜாக்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெல்லை மாவட்டத்தில் உள்ள பணகுடி காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு பேரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர் கடந்த ஜனவரி மாதம் முதல் பணகுடி காவல்நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் குண்டுபட்டி கிராமத்தில் வசிக்கும் ஒரு பெண்ணை குழந்தையுடன் கூட்டிவந்து பணகுடியில் குடும்பம் நடத்தி வந்துள்ளார். அந்த பெண்ணின் மகளான 13 வயது சிறுமிக்கு கடந்த 2 மாதங்களாக அருள் ஜாக்சன் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த சம்பவம் அந்த சிறுமியின் தாய்க்கும் தெரியும் என கூறப்படுகிறது.
இது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சர்ச்சில் என்பவருக்கு புகார் வந்துள்ளது. இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சர்ச்சில் விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில் நடந்த சம்பவம் உண்மை என தெரிய வந்துள்ளது. இதனையடுத்து குழந்தை பாதுகாப்பு அலுவலர் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அருள் ஜாக்சன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கள்ளக்காதலி ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த அருள் ஜாக்சன் மற்றும் அவரது கள்ளக்காதலி ஆகிய 2 பேரும் தலைமறைவாகினர். மேலும் ஜாக்சன் கடந்த 26-ஆம் தேதி முதல் விடுப்பில் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.