Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் கிடந்த பிணம்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

ரயிலில் அடிபட்டு வடமாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் அதிகாலையில் மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் உடல் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளது. இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் புளூட்டோ வரவழைக்கப்பட்டது. இதனையடுத்து மோப்ப நாய் தண்டவாளத்தில் சிறிதுநேரம் பிணம் கிடந்த இடத்தில் ஓடிச் சென்று நின்றது. மேலும் சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பிணத்தை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் இறந்து கிடந்தவர் சத்தீஸ்கர் மாநிலம் பகுதியில் வசிக்கும் சோன் சாய் நாக் என்பதும் இவர் நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவர் இரவு நேரத்தில் ரயில்வே கேட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் வந்த கேரளாவுக்கு சென்ற பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு இருந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |