Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பொதுமக்கள் உறுதிமொழி…. அதிகாரிகளின் விழிப்புணர்வு நிகழ்ச்சி…. ஆட்சியரின் தகவல்….!!

வாக்கு சீட்டின் மூலமாக வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு வாக்கு எண்ணும் மையமாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் 100% வாக்களிப்பதன் அவசியம், தேர்தலின் போது எவ்வாறு வாக்கு சீட்டு மூலம் வாக்களிக்க வேண்டும் என்பது பற்றி மாதிரி வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கியுள்ளார்.

அப்போது தேர்தலில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு மற்றும் வேட்பு மனுக்கள் பரிசீலனை தொடர்பான பணிகள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டு சின்னங்கள் ஒதுக்கீடு பணி நிறைவு பெற்றிருக்கிறது. அதன்பின் சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது மின்னணு முறையில் வாக்குப்பதிவு மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வாக்கு சீட்டு மூலம் வாக்களிக்கும் முறை மேற்கொள்ளப்பட இருக்கின்றது. இது தொடர்பாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை தொடர்ந்து கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு இளஞ்சிவப்பு நிறமும், வார்டு உறுப்பினர் பதவிக்கு பச்சை நிறமும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு மஞ்சள் நிறமும் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு வெள்ளை நிறம் பயன்படுத்தப்பட இருக்கிறது. மேலும் தேர்தலின் போது வாக்காளர்கள் கவனத்துடன் வாக்களிக்க வேண்டுமெனவும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு கலெக்டர் வழங்கியுள்ளார். அதற்குப் பிறகு 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்த உறுதிமொழியை அனைவரும் எடுத்துக் கொண்டுள்ளனர்.

Categories

Tech |