மின்சார வாரிய லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.ஐ.ஜி அலுவலகத்தில் மின் இணைப்பு குறித்த புகார் காரணத்தினால் சூப்பிரண்டு பிரபாகரன் ஆய்வு செய்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கணக்குப்பிள்ளை தெருவில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழ்நாடு மின்சார வாரிய லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.ஐ.ஜி அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரின் பேரில் துருகம் சாலை பின்புறத்தில் இருக்கும் விவசாய நிலத்தில் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வருபவர்கள் வீடு கட்டும் மற்றும் வீட்டுமனைகளை விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளார். அதன்பின் இவர்களுக்கு சாதகமாக மின்வாரிய உயர் அதிகாரிகள் மிகப்பெரிய மின் பாதை அமைத்து மின் இணைப்பு வழங்கியுள்ளனர்.
இதனால் ஒரு மின் இணைப்பு தரப்பட்ட தன் மூலமாக பல வீடுகள் கட்டி வருகின்றனர். அதன்பின் விதிகளை மீறி வழங்கப்பட்டுள்ள இந்த இணைப்பு விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் மின் வாரிய லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை சூப்பிரண்டு பிரபாகரன் திடீரென ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
அந்த ஆய்வில் மின் இணைப்பு கொடுக்கப்பட்ட ஆவணங்கள், மின் கம்பங்கள், மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ள ஆவணங்களை ஆய்வு செய்துள்ளார். அப்போது மின்துறை அலுவலரிடமும் மற்றும் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தியுள்ளார். மேலும் விசாரணை முடிவடைந்த நிலையில் அங்கிருந்து சென்றுள்ளார்.