Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எங்களை நிரந்தரம் செய்ய வேண்டும்…. உண்ணாவிரத போராட்டம்…. முதல்-அமைச்சருக்கு கோரிக்கை….!!

ஊழியர்கள் தங்களின் பணிகளை நிரந்தரம் செய்யுமாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டத்திலுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதியம் ஊழியர்கள் 300-க்கும் அதிகமானோர் 12 வருடங்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யுமாறு பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பலமுறை கூறி கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் அரசின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் தினக்கூலி மற்றும் தொகுப்பூதியம் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டத்திற்கு ஊழியர் சங்க தலைவர் மனோகரன் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் போராட்ட களத்தில் 100-க்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு தங்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்யுமாறு கோஷங்களை எழுப்பி உள்ளனர். இதனை அடுத்து ஊழியர் சங்க தலைவர் மனோகரன் கூறும் போது, அண்ணாமலை பல்கலைக்கழகத்தை தமிழக அரசு கையகப்படுத்தி இருக்கிறது.

பின்னர் 340 தினக்கூலி, தொகுப்பூதிய ஊழியர்கள் பணி நிரந்தரமாக்காமல் மிக குறைவான ஊதியத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இதனால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |