ஆழ்துளை கிணத்துக்குள் விழுந்த குழந்தை சுஜித்தை விரைந்து மீட்க வேண்டுமென்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் ட்வீட் செய்தார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ், மேரி தம்பதியின் குழந்தை சுஜித். இவர் நேற்று மாலை 5.40 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தெரியாமல் தவறி விழுந்தார்.இதனை தொடர்ந்து ஆழ்துளைக் கிணற்றில் இருந்து சுஜித்தை மீட்க தீயணைப்புப் படையினர் 17 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கக் கோரி ட்விட்டரில் #savesujith என்ற ஹாஷ்டேக் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.குழந்தையை பத்திரமாக மீட்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் #PrayForSujith ஹாஷ் டேக்கில் ட்வீட் செய்து வருகின்றனர். இதில் பிரபலங்களும் அடங்குவர்.
இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தனது ட்வீட்_டர் பக்கத்தில் , குழந்தை சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும். அவரது குடும்பம் துடிப்பதைப் போல் நாமும் துடிக்கிறோம். அரசு இயந்திரம் முழுமையாகச் செயல்பட்டு அந்த உயிரை மீட்டாக வேண்டும். தொடர்ச்சியாக இதுபோன்ற சோக நிகழ்வுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வேண்டும் என்று தனது ட்வீட்_டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மனம் கனக்கிறது!
குழந்தை சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும். அவரது குடும்பம் துடிப்பதைப் போல் நாமும் துடிக்கிறோம்.
அரசு இயந்திரம் முழுமையாகச் செயல்பட்டு அந்த உயிரை மீட்டாக வேண்டும்.
தொடர்ச்சியாக இதுபோன்ற சோக நிகழ்வுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வேண்டும்! #Savesujithvinsen https://t.co/mmaAiJP8Qq
— M.K.Stalin (@mkstalin) October 26, 2019