ரயில்வேத்துறை அமைச்சருக்கு, மதுரை சு.வெங்கடேசன் எழுதிய கடிதத்தில், ஹிந்தியில் தேர்வெழுதிய கோரக்பூர் தேர்வர்களை தெற்கு ரயில்வேயில் பணியமர்த்த கூடாது என வேண்டுகோள் வைத்திருந்தார். இதனையடுத்து கோரக்பூர் தேர்வர்கள் அனைவரும் திரும்பி அனுப்பப்பட்டனர்.
மேலும் ஓட்டுநர் தேர்வாளர்கள் பட்டியலில் கோரக்பூர் தேர்வர்களை திருப்பி அனுப்பியுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் சு.வெங்கடேசன் தனது கோரிக்கைக்கு விரைந்து செயலாற்றி நடவடிக்கையை மேற்கொண்டதற்காக ரயில்வே துறைக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் கோரக்பூரில் தேர்வு செய்யப்பட்டவர்களை தெற்கு ரயில்வேக்கு பணியமர்த்தும் நடவடிக்கை முறியடிப்பு.
பட்டியலை திருப்பி அனுப்பியது தெற்கு ரயில்வே.
விரைந்து நடவடிக்கைக்கு எடுத்தமைக்கு நன்றி. @GMSRailway #Railway #Tamilnadu pic.twitter.com/AXnzH4pLm8
— Su Venkatesan MP (@SuVe4Madurai) September 30, 2021