பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பத்திரிக்கையாளர்களை தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசுயதற்கு எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வந்தது. இதனையடுத்து தான் பயன்படுத்திய வார்த்தையில் எந்த தவறும் இல்லை என்றும், அதற்கான விளக்கம் விக்கிபீடியாவில் இருக்கிறது என்றும் விளக்கம் கொடுத்திருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கார்த்தி சிதம்பரம், பத்திரிகையாளர்களிடம் ஹெச்.ராஜா உபயோகித்த வார்த்தைகளுக்கும் எனக்கு தெரிந்த அளவிற்கு ஆங்கில அகராதியில் எந்த அர்த்தமும் கிடையாது. அது விமர்சனத்திற்கு உருவாக்கப்படும் ஒரு கொச்சையான வார்த்தை.
பொதுவாழ்க்கையில் உள்ளவர்கள் அப்படியான வார்த்தைகளை தவிர்க்க வேண்டும். மேலும் பேசிய அவர், தங்களுக்கு வேண்டிய தனியார் கம்பெனிகளுக்கு சாதகமாக நடந்து கொள்ள மிகப் பெரிய பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தையே மத்திய அரசு மூடிவிட்டது. அதனால் வானொலி நிலையங்களை மூடுவது என்பது ஆச்சரியத்திற்கு இல்லை என்று பேசியுள்ளார். ஹெச்.ராஜாவின் பேச்சு நாளுக்கு நாள் வரம்பு மீறியும், அருவருக்கத்தக்க வகையியிலும் உள்ளதால் ஒட்டு மொத்த பாஜகவின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.