Categories
உலக செய்திகள்

வடகொரியா ஆட்சி குழு…. இடம் பிடித்த கிம் கோ ஜாங்…. வெளிவந்த தகவல்….!!

கிம் கோ ஜாங் அரசை ஆளும் ஆணையத்தின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வட கொரியா நாட்டின் அதிபராக இருந்து வரும் கிம் ஜாங் உன்னின் சகோதரியாக கிம் கோ ஜாங் இருக்கின்றார். இவர் தன்னுடைய சகோதரியின் முக்கியமான ஆலோசகராக இருந்து வருகிறார். மேலும் கிம் கோ ஜாங் வட கொரியா நாட்டில் செல்வாக்கு மற்றும் அதிகாரம் மிகுந்தவராக கருதப்படுகிறார். அதுமட்டுமின்றி வர வடகொரியா ஆளுங்கட்சியின் முக்கியமான பொறுப்பிலும் அவர் இருக்கின்றார். இந்நிலையில் கிம் கோ ஜாங்க்கு அரசு பதவி தற்போது கிடைத்து இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

இவ்வாறு ஆலோசகராக அறியப்பட்ட கிங் கோ ஜாங் அந்நாட்டு அரசை வழிநடத்தும் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். அவற்றில் இடம் பெற்றிருக்கும் இளம் வயது மற்றும் ஒரே பெண்மணி கிம் கோ ஜாங் ஆகும். இதனையடுத்து அந்நாட்டின் மாநில விவகார ஆணையம் என்பது நாட்டை ஆளுகின்ற குழுவாகும். இந்த குழுவிலிருந்து சிலர் வயது மூத்தோர் காரணமாக ஓய்வு பெற்றனர். மேலும் சில பேர் வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்டனர். அதன்பின் தற்போது புதிதாக 8 பேர் இந்த ஆட்சி குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு நியமிக்கப்பட்ட 8 பேரில் ஒருவராக கிம் கோ ஜாங் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |