தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக முழு ஊரடங்கால் மதுரை கோட்ட ரயில்கள் சேவை நிறுத்தப்பட்டது. அதன்பிறகு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வருகின்ற அக்டோபர் 7ஆம் தேதி முதல் மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு முன்பதிவு இல்லாத ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
அதன்படி ராமேஸ்வரத்திலிருந்து அதிகாலை 5.40 மணிக்கு புறப்பட்டு காலை 9.30 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தில் சென்றடையும் அதன் பிறகு மதுரையில் இருந்து மாலை 6.10 மணிக்கு புறப்பட்டு இரவு 10 மணிக்கு ராமேஸ்வரம் வந்தடையும். இதையடுத்து இந்த ரயில் பாம்பன், மண்டபம்,உச்சிப்புளி, ராமநாதபுரம், சத்திரக்குடி, பரமக்குடி, மானாமதுரை, திருப்பாச்சேத்தி, திருப்புவனம், சிலைமான் மற்றும் கீழ் மதுரை ரயில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்படுகிறது.