பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சார்க்கோஸிற்க்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012ஆம் வருடத்தில் நடந்த அதிபர் தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி, அவருக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை காட்டிலும், இரு மடங்கு அதிகமாக தேர்தல் பிரச்சாரத்திற்கு செலவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டு அவருக்கு ஒரு வருடம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
அதாவது, 19.5 மில்லியன் பவுண்டுகள், அவருக்கு பிரச்சாரம் மேற்கொள்ள ஒதுக்கப்பட்டது. ஆனால், அவர் 37 மில்லியன் பவுண்டுகள் செலவளித்துள்ளார். அதன் பின்பு, அவரின் குழு அதனை வெளியில் தெரியாமல் மறைக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, ஒரு நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் ஓரு வருடம் சார்க்கோஸிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது ஜாமினில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில், மீண்டும் அவருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
எனினும், நீதிபதி, ட்ராக் செய்யக்கூடிய ஒரு எலக்ட்ரானிக் bracelet-ஐ காலில் அணிந்தபடி, அவர் வீட்டிலேயே தண்டனை அனுபவித்துக்கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறார். ஆனால், அவர் அதிகம் செலவு செய்தும் அந்த தேர்தலில், தோல்வியடைந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.