ஆழ்துளை கிணத்துக்குள் விழுந்த குழந்தை சுஜித்தை நலமுடன் மீட்கப்பட வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் ட்வீட் செய்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ், மேரி தம்பதியின் குழந்தை சுஜித். இவர் நேற்று மாலை 5.40 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தெரியாமல் தவறி விழுந்தார்.இதனை தொடர்ந்து ஆழ்துளைக் கிணற்றில் இருந்து சுஜித்தை மீட்க தீயணைப்புப் படையினர் 18 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கக் கோரி ட்விட்டரில் #savesujith என்ற ஹாஷ்டேக் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.குழந்தையை பத்திரமாக மீட்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் #PrayForSujith ஹாஷ் டேக்கில் ட்வீட் செய்து வருகின்றனர். இதில் பிரபலங்களும் அடங்குவர்.
இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் TTV தினகரன் தனது ட்வீட்_டர் பக்கத்தில் திருச்சி மணப்பாறை அருகே ஆழ்துளை குழியில் சிறுவன் சுர்ஜித் தவறி விழுந்த நிகழ்வு மனம் பதைக்கச் செய்கிறது. சிறுவன் சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன் என்று தனது வேதனையை தெரிவித்துள்ளார்.
திருச்சி மணப்பாறை அருகே ஆழ்துளை குழியில் சிறுவன் சுர்ஜித் தவறிவிழுந்த நிகழ்வு மனம் பதைக்கச் செய்கிறது. சிறுவன் சுர்ஜித் நலமுடன் மீட்கப்படவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) October 26, 2019