தொழிலதிபர் ஒருவர் ஓட்டல் அறையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்பட்ட வழக்கில் போலீசார் அவரை அடித்து கொலை செய்துவிட்டு ஓட்டல் ஊழியர்களின் உதவியுடன் அதனை மறைத்ததாக இறந்தவரின் மனைவி கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த 38 வயதாகும் மனிஷ் குப்தா என்ற ரியல் எஸ்டேட் தொழிலதிபர் தனது நண்பர் சிலருடன் கோரக்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நிலையில் அவர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மதுபோதையில் அடிபட்டு இறந்து விட்டதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். இந்த விவகாரத்தில் தற்போது திடீர் திருப்பம் அரங்கேறியுள்ளது. மனிஷ் குப்தா கான்பூரில் உள்ள அவரது நண்பரான சந்தன் சைனி என்பவரின் அழைப்பை ஏற்று கோரக்பூரில் ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி உள்ளனர். அப்போது ரெய்டு என்ற பெயரில் நள்ளிரவில் ஹோட்டலுக்கு வந்த காவல்துறையினர் அனைவரின் அறையையும் தட்டி விசாரித்து வந்துள்ளனர்.
அப்போது மனிஷ் குப்தா தங்கியிருந்த அறையை சோதனை செய்தபோது மனிஷ் குப்தாவுக்கு, அதிகாரிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது, இந்த கலவரத்தில் மனிஷ் குப்தாவை காவல்துறையினர் அடித்து கொலை செய்து விட்டதாகவும், அவரின் தலையில் ரத்த காயத்துடன் அந்த அறையை விட்டு இழுத்து வந்ததை பார்த்ததாக ஹர்தீப் சிங் என்பவர் கூறியுள்ளார். பின்னர் கொலையை மறைக்க அவர் குடித்துவிட்டு மதுபோதையில் கீழே தவறி விழுந்ததாக கூறி இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் வந்த அவரின் மனைவி மீனாட்சி தனது கணவனை அடித்து கொலை செய்துவிட்டு, அதனை ஓட்டல் ஊழியர்கள் உதவியுடன் மறைத்திருக்கிறார்கள். என் கணவனின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று கண்ணீருடன் கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் உள்ளிட்ட ஆறு காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மீதி இருந்த காவலர்கள் தப்பி ஓடிவிட்டதால் அவர்களை தேடி வருகின்றனர்.