Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொட்டகையில் ஏற்பட்ட தீ விபத்து…. உயிரிழந்த கால்நடைகள்…. போலீஸ் விசாரணை…!!

மதுரையில் கொட்டகையில் ஏற்பட்ட  தீ விபத்தில் ஆடு, மாடுகள்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரைமாவட்டத்திலுள்ள  பொட்டிபுரத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார்.  இவருக்கு சொந்தமாக 2  கொட்டகைகள் இருக்கின்றது. அங்கு ஆடு,மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவரது  கொட்டகையில் திடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு  வீரர்கள்சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  ஒரு மணி நேரம் போராடத்திற்கு பிறகு தீயை அணைத்து விட்டனர்.

ஆனால் இந்த தீ விபத்தில் கொட்டகையில் இருந்த 5 மாடுகள், 16 ஆடுகள் மற்றும் 2  நாய்கள் பரிதாபமாக உயிரிழந்து விட்டது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்து ஏற்பட்டதற்கான   காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |