தமிழகத்தில் அரிவாள் போன்ற பயங்கரமான ஆயுதங்களை வாங்க வருபவரின் பெயர், முகவரி, தொலைபேசி எண், போன்றவற்றை பதிவேட்டில் பதிவு செய்யவும் மற்றும் ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதை கண்காணிக்கவும், அனைத்து போலீஸ் கமிஷனர்களுக்கும் மாவட்ட எஸ்பிகளுக்கும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதைப்பற்றி அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் பேசியிருப்பது, முன்விரோதம் காரணமாக கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
அதைத் தொடர்ந்து மாநில அளவில் எடுக்கப்பட்ட ஆப்பரேஷன் என்கின்ற தேடுதல் வேட்டையில் சுமார் 3,325 கொலை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கொலை சம்பவங்களுக்கு பயன்படுத்திய 1,110 சக்திகள், 7 கள்ளத் துப்பாக்கிகள் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளனர். அதன்பின்னர் கத்தி, அரிவாள் போன்ற பயங்கரமான ஆயுதங்களை தயாரிப்பவர்களின் விவரங்கள் மற்றும் தயாரிக்கும் இடத்தைப் பற்றியும், தெரிந்துகொள்ள வேண்டும்.
அதன் பின்னர் அந்த இடத்திற்கு ஆயுதங்களை வாங்க வருபவரின் பெயர், முகவரி, கைபேசி எண் மற்றும் எந்த காரணத்திற்காக ஆயுதங்களை வாங்குகிறார் போன்ற விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அதையடுத்து விவசாயம் மற்றும் வீட்டு உபயோகத்திற்கு மட்டுமே ஆயுதங்கள் விற்பனை செய்யவேண்டும்.
இதைத்தவிர வேறு காரணங்களுக்காக கத்தி போன்ற ஆயுதங்களை அடையாளம் தெரியாத நபர்களிடம் விற்பனை செய்யக்கூடாது மற்றும் கண்காணிப்பு கேமராக்களை கடை மற்றும் பட்டறைகளில் பொருத்த வேண்டும். கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதற்கு சிக்கல் ஏற்பட்டால் காவல்துறையினர் உதவி செய்து கொடுக்க வேண்டும். மேலும் குற்றவாளிகளை பற்றிய தகவல்களை காவல்துறையினருக்கு தெரிவிப்பவர்களுக்கு ஏற்ற வெகுமதி கொடுக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.