Categories
தேசிய செய்திகள்

பணம் போடும் சாக்கில்… ஏடிஎம்மில் 3 கோடி ஆட்டையை போட்ட மூன்று பேர்…. கையும் களவுமாக பிடித்த போலீஸ்…!!!

வங்கி ஏடிஎம்மில் 3 கோடி கையாடல் செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோலாரில் உள்ள வங்கி ஏடிஎம்களில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருபவர்கள் கங்காதர், சுனில் குமார், பவன் குமார், மற்றும் முரளி. இவர்கள் வங்கிகளில் பணம் பெற்று அதனை ஏடிஎம்களில் நிரப்பும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இவர்கள் வங்கிகளில் பணத்தை பெற்று அதனை முறையாக ஏடிஎம்மில் நிரப்பாமல் 3 கோடி வரை கையாடல் செய்தது வங்கி கணக்கு தணிக்கையில் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து வங்கி நிர்வாகத்தினர் கோலார் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நான்கு பேரும் தலைமறைவாகி இருந்தனர். தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் சுனில்குமார் பவன்குமார் கங்காதர் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. முக்கிய குற்றவாளியான முரளி தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |