Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரூ.5000 சம்பள உயர்வு…. அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 2020-2021 ஆம் கல்வியாண்டில் அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் தற்காலிகமாக பேராசிரியர்கள் 1661 நபர்கள் பணியமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு கடந்த 11 மாதங்களாக மாதம்தோறும் 15,000 தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் தற்காலிக பேராசிரியர்களின் தொகுப்பூதியத்தை ரூ.15000 லிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020- 2021 ஆம் கல்வியாண்டில் 59 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தற்காலிக பேராசிரியராக 1,600 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாதம் 20 ஆயிரம் வீதம் தொகுப்பூதியம் வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு ரூ.36.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். அதனைத் தொடர்ந்து கல்லூரி தற்காலிக பேராசிரியர்கள் அரசின் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் அரசு விரிவுரையாளர்களின் சங்கத்தின் தலைவர் தங்கராஜ் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |