நடிகை ஆண்ட்ரியா தனது குழந்தை பருவ புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ஆண்ட்ரியா தற்போது அரண்மனை-3, பிசாசு-2 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் சுந்தர்.சி இயக்கியுள்ள அரண்மனை-3 படம் விரைவில் வெளியாக உள்ளது. மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு-2 படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் நடிகை ஆண்ட்ரியா அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் ஆண்ட்ரியா குட்டி பாப்பாவாக இருந்தபோது எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ‘நான் குட்டி பிசாசாக இருந்தபோது’ என்று கேப்ஷனாக பதிவிட்டுள்ளார். தற்போது இந்த அழகிய புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது .
https://www.instagram.com/p/CUcHF39JXM-/?utm_source=ig_embed&ig_rid=e216fb87-73ef-4e5e-9021-be64cfe61f7b