தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் மாறன் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன்-2 உள்பட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் மாறன் படத்தை கார்த்திக் நரேன் இயக்கிவருகிறார். இந்த படத்தில் மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சமுத்திரகனி, ஸ்மிருதி வெங்கட், மகேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
ஹைதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இதனிடையே நடிகர் தனுஷ் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி வரும் திருச்சிற்றம்பலம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வந்தார். இந்நிலையில் மாறன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக இயக்குனர் கார்த்திக் நரேன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.