43லட்சம் பேர் நகைக்கடன் வாங்கியுள்ள நிலையில் 6லட்சம் பேருக்கு தான் கொடுப்பதாக தகவல் வந்துள்ளது என எடப்பாடி குற்றம் சாட்டியுள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திராவிட முன்னேற்ற கழகம் பல்வேறு அறிவிப்புகளை கொடுத்தார்கள். அந்த அறிவிப்புகளை நம்பி தான் வாக்களித்தார்கள் பொதுமக்கள். அதன் மூலமாக திராவிட முன்னேற்ற கழகம் வென்றது, ஆட்சி பிடித்தது, திராவிட முன்னேற்றக் கழகத்தில் தமிழகத்தின் முதலமைச்சராக வந்திருக்கிறார்.
இதுவரைக்கும் என்ன அறிவிப்பு கொடுத்திருக்கிறார்கள் ? என்ன வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார்கள். ஒவ்வொரு குடும்ப தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக அறிவித்தீர்களே… இதுவரைக்கும் கொடுத்தீர்களா ?
கிடைத்ததா, கிடைக்காது, கொடுக்க மாட்டார்கள். என்றைக்கு திமுக வாக்குறுதி கொடுத்து நிறைவேற்றப்பட்டது சரித்திரமே கிடையாது. தேர்தல் நேரத்தில் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிடுவார், மக்களை ஏமாற்றுவார்கள், வாக்குகளைப் பெறுவார்கள், வெற்றி பெறுவார்கள், வெற்றி பெற்ற பிறகு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை காற்றில் பறக்க விடுவார்கள்.
குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக சொன்னீர்களே ஏன் நிறைவேற்றவில்லை… மக்களுக்கு சொல்லுங்க…பொய் சொல்லி வாக்குகளை பெற்றேன் என்பதை சொல்லுங்கள்… 5 சவரனுக்கு குறைவாக தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் கடன் பெற்ற நகை அடமானம் வைத்த கடன் பெற்ற கடன் தொகை ரத்து செய்யப்படும் என்று சொன்னார், இதுவரைக்கும் இல்லை.
பல்வேறு விதிகளை போட்டுள்ளார்… அந்த விதிகளின் படி பார்த்தால் மொத்தம் 43 லட்சம் பேர் தமிழகத்தில் நகையை கூட்டுறவு சங்கத்தில் அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளார்கள்.. அதில் ஒரு ஆறு லட்சம் பேருக்கு தான் கடன் கிடைக்கும் என்று இப்பொழுது தகவல் கிடைத்துள்ளது, அதுவும் கிடைக்குதா ? இல்லையா ? என்று பின்னால் இருந்து பார்த்தால் தான் தெரியும் என எடப்பாடி தெரிவித்தார்.