Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஒரு பக்கம் மீட்பு பணி ….. மறுபக்கம் சாரல் மழை …… மீண்டுவா ? சுஜித் …!!

மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயது சிறுவன் சுஜித்தை மீட்கும் பணி 18 மணி நேரத்திற்கும் அதிகமாக நடைபெற்று வருகின்றது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ், மேரி தம்பதியின் குழந்தை சுஜித். இவர் நேற்று மாலை 5.40 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தெரியாமல் தவறி விழுந்தார்.இதனை தொடர்ந்து ஆழ்துளைக் கிணற்றில் இருந்து சுஜித்தை மீட்க தீயணைப்புப் படையினர் 18 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.

 

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கக் கோரி ட்விட்டரில் #savesujith என்ற ஹாஷ்டேக் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.குழந்தையை பத்திரமாக மீட்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் #PrayForSujith ஹாஷ் டேக்கில் ட்வீட் செய்து வருகின்றனர். தொடர்ந்து குழந்தை சுஜித்தை மீட்க பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் குழந்தை சுஜித் அசைவின்றி இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.

 

குழந்தை மேல் மண் விழுந்துள்ளதால் மண்ணை அகற்றும் பணி தற்போது நடந்து வருகின்றது. நடுக்காட்டு பட்டியில் சாரல் மழை பெய்து வருவதால் ஆழ்துளை கிணற்றுக்குள் தண்ணீர் செல்லாமல் இருப்பதற்காக தார்ப்பாய் வைத்து மூடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு , மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அமைச்சர்கள் , ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மீட்பு பணிகளை கண்காணித்து வருகின்றனர். நெய்வேலி என்எல்சி சுரங்க மீட்புக்குழு அதிநவீன கருவிகளுடன் திருச்சி விரைந்துள்ளது.  தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் நடுகாட்டுப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.

Categories

Tech |