சென்னையில் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்றும் அக்டோபர் 10-ஆம் தேதியும் டாஸ்மாக் மதுபான கடைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயாராணி வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்றும், 19ஆம் தேதி மிலாதுநபி அன்றும் சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மற்றும் நட்சத்திர ஹோட்டலில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து பார்களும் முழுவதுமாக அடைக்கப்பட வேண்டும். மேலும் அந்த இரண்டு தினங்களிலும் மதுபானம் விற்பனை செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. சட்டத்தை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துத்துள்ளார்.
Categories