வயிற்று வலியால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிறு பாலை என்னும் கிராமத்தில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரவிந்த் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் அரசு கலை கல்லூரியில் பட்டப்படிப்பு பி காம் 2 -ஆம் ஆண்டு பயின்று வந்துள்ளார். இந்நிலையில் வயிற்று வலியின் காரணமாக அரவிந்த் அவதிப்பட்டு வந்துள்ளார். அதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரவிந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.