பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 3 ஆண்டுகள் முடித்து 4ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்ற இன்ப செய்தியை மூர்த்தி வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். சமீபத்தில், இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வந்த லட்சுமி அம்மாள் இறந்துவிட்டதாக காட்டி சோகமான காட்சிகளையே ஒளிபரப்பி வந்தனர். இதனையடுத்து, இனிமேல் இந்த சீரியலின் கதை விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தற்போது இந்த சீரியல் 3 வருடங்களை கடந்து வெற்றிகரமாக நான்காவது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது. இதனை அந்த சீரியலில் மூர்த்தி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஸ்டாலின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/CUeJATkBFLZ/?utm_source=ig_embed&ig_rid=4fe0c58a-13ca-4b8d-8924-c1faba8a4e52