கேரளா கல்லூரியில் மாணவியை காதலன் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் கோட்டயம் பாலா பகுதியில் உள்ள செயின்ட் தாமஸ் கல்லூரியில் தலையோலபரம்பு என்ற பகுதியை சேர்ந்த 22 வயதான நித்தினா மோல் (Nithina Mol) என்ற மாணவி மூன்றாமாண்டு சமையல் கலைப் படிப்பு பயின்று வருகிறார்.. அதே கல்லூரியில் கூத்தாட்டுக்குளத்தை சேர்ந்த அபிஷேக் பைஜு (21) (Abhishek Baiju) என்ற மாணவரும் பயின்று வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை கல்லூரி வளாகத்தில் மாணவி நிதினாவை பேப்பரை வெட்ட பயன்படுத்தும் கட்டரை வைத்து (office knife) அபிஷேக் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் அந்த மாணவி ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார்.. இதனை கண்டு சக மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.. மேலும் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது..
பின்னர் போலீசார் அந்த மாணவனை பிடித்து விசாரணை நடத்தியதில் காதல் விவகாரம் தொடர்பாக மாணவியை கொலை செய்தது தெரியவந்தது.. தொடர்ந்து அந்த மாணவனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. இந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.