Categories
மாநில செய்திகள்

மகாளய அமாவாசைக்கு நீராட தடை…. அதிரடி அறிவிப்பு….!!!!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி, பர்வதமர்தனியம்மன் கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் அனைவரும் அக்னி தீர்த்த கடலில் நீராடிவிட்டு, அதன்பிறகு தீர்த்த கிணறுகளில் குறித்து சுவாமி தரிசனம் செய்வார்கள். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தடுப்பு நடவடிக்கையாக தீர்த்த கிணறு தற்போது மூடப்பட்டுள்ளது. மேலும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும் அனுமதி இல்லை. பிற நாட்களில் அக்னி தீர்த்த கடற்கரையில் நீராடி தரிசனத்திற்கு மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் அக்டோபர் ஐந்தாம் தேதி மாலை முதல் அக்டோபர் 6ஆம் தேதி வரை மகாளய அமாவாசையை முன்னிட்டு அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் கூடுவார்கள். அதனால் இரண்டு நாட்கள் முழுவதும் அக்னி தீர்த்தக் கரை பகுதியில் நீராடவும், ராமநாதசுவாமி கோவிலில் வழிபடும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் இந்த தடை தொடரும்.

Categories

Tech |