Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தினமும் 20,000-க்கு அதிகமாக இருக்க வேண்டும்…. விரைவாக பட்டியல் தயாரிப்பு…. ஆட்சியரின் உத்தரவு….!!

20,000 நபர்களுக்கு மேலாக தடுப்பூசி செலுத்துவதற்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் தடுப்பூசி செலுத்தப்படும் பணிகள் குறித்து அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது மாவட்டத்தில் இருக்கும் அனைத்து பகுதிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் ஆதார் எண்ணை பரிசோதனை செய்து தடுப்பூசி எடுத்துக் கொண்டார்களா என்பதை கண்டறிந்து இதுவரை போடாதவர்களுக்கு உடனே செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் போன்ற நிரந்தர தடுப்பூசி செலுத்தும் மையங்கள் தீவிரமாக செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து நடமாடும் தடுப்பூசி செலுத்தும் குழு அனைத்து பகுதிகளுக்கும் செல்ல ஏற்பாடு செய்த நிலையில் பொதுமக்கள் அனைவரும் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து மாவட்டத்தில் இருக்கும் அனைத்து வட்டார மருத்துவ அலுவலர் தீவிரமாக கண்காணித்து தடுப்பூசி செலுத்தாதவர்களின் பட்டியல் தயார் செய்து அவர்களுக்கு விரைவில் தடுப்பூசி செலுத்த வேண்டும். மேலும் எல்லா கொரோனா தடுப்பூசி மையங்களின் தினமும் 20,000 நபர்களுக்கு மேல் தடுப்பூசி செலுத்த வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |