பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரங்கனூர் பள்ளிக்கூட பகுதியில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி அம்பிகா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அம்பிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அம்பிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனை அடுத்து அம்பிகாவின் தற்கொலைக்கான காரணம் என்னவென்று இதுவரை கண்டறியப்படவில்லை. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆன நிலையில் வரதட்சணை கொடுமை காரணத்தினால் அம்பிகா தற்கொலை செய்து கொண்டுள்ளாரா இல்லை வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என பலகோணங்களில் கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.