2018ஆம் ஆண்டு மறவம்பட்டியில் தாயை கொலை செய்த மகனுக்கு தூக்கு தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுக்கோட்டை அருகே இருக்கும் மறவம்பட்டி என்ற ஊரை சேர்ந்தவர் தான் திலக ராணி. இவரது கணவர் தங்கராஜ். இந்த தம்பதிக்கு 4 மகன்கள் இருக்கின்றனர். 12 ஆண்டுகளுக்கு முன்பாக குடும்ப தகராறில் கணவர் தங்கராஜை மனைவி திலக ராணி கொலை செய்துள்ளார்.. இந்த கொலை வழக்கில் ராணி கொலை குற்றவாளியாக கைது செய்யப்பட்டு, பின் போதிய ஆதாரம் ஏதும் இல்லாத காரணத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
4 மகன்களும் பெரிய பிள்ளைகளாக வளர மூத்த மகன் ஆனந்த் (23) சொத்தை பகிர்ந்து தருமாறு தன்னுடைய தாயிடம் கேட்டு வந்துள்ளார். அதேபோன்று மற்ற 3 பிள்ளைகளும் நிலத்தை பகிர்ந்து கேட்டதாக சொல்லப்படுகிறது. அடிக்கடி சொத்து தொடர்பாக அம்மாவுக்கும், மகனுக்கும் இடையே தினமும் சண்டை நடப்பது வாடிக்கையாக இருந்து வந்துள்ளது..
இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் தேதி இரவு கடும் சண்டை நடந்ததாகவும், அப்பொழுது நீ சொத்தை கேட்டால் நான் உன்னுடைய அப்பாவை கொலை செய்தது போல் உன்னையும் கொன்று விடுவேன் என்று தாய் மகன் ஆனந்தை மிரட்டியதாக சொல்லப்படுகிறது.
இதனை கேட்டு கோபமடைந்த மகன் ஆனந்த் மார்ச் 18ஆம் தேதி அதிகாலை தன்னுடைய தாயின் தலை முடியை பிடித்து இழுத்து வீட்டுக்கு வெளியே தர தரவென இழுத்துக்கொண்டு வந்தவன் கையில் வைத்திருந்த அரிவாளால் தலையை வெட்டி தனியாக எடுத்துவிட்டான்.. இதனை கண்ட அந்த பகுதி மக்கள் ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டனர்..
பின்னர் அம்மாவின் தலையை தனியாக ஒரு பையில் போட்டு கறம்பக்குடி காவல் நிலையத்தில் ஆனந்த் சரணடைய போலீசாரே அதிர்ந்து போய் விட்டனர். பின் மறவன்பட்டி கிராமம் மழையூர் காவல்நிலைய எல்லைக்குள் வருவதால், கறம்பக்குடி காவல் துறையினர் அவர்களுக்குத் தகவல் கொடுத்தார்கள். தெருவில் கிடந்த உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்..
இந்த கொலை வழக்கு புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த 3 ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்த நிலையில், தாயை கொன்ற ஆனந்த் என்பவருக்கு இன்று தூக்கு தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.