Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு 8 லட்சம் கூடுதல் தடுப்பூசிகள்…. இன்று மாலை சென்னை வருகை….!!!!

தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணியானது வேகமாக நடந்து வருகிறது. இந்த மாத இறுதிக்குள் பெரும்பாலானவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்து மாவட்டங்களிலும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. ஆனால் தமிழகத்தில் தேவைக்கு ஏற்றவாறு தடுப்பூசி வினியோகம் இல்லை. அதனால் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படும் நிலையில் முகாம்கள் நடைபெறாமல் இருக்கிறது. செப்டம்பர் மாதம் ஒதுக்கி வைத்திருந்த 8 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி இன்று மாலை 6 மணிக்கு சென்னைக்கு வருகிறது.

கடந்த மாதம் ஒதுக்கியதைவிட அதிகமான தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. எனவே அக்டோபர் மாதத்திற்கான ஒதுக்கீடு ரூபாய் 1 கோடியே 23 லட்சம் என்று மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இவை படிப்படியாக தமிழகத்திற்கு வந்து சேரும் என்று தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் அறிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பது, மத்திய அரசு இந்த மாதம் ஒதுக்கீடாக 1.23 கோடி தடுப்பூசிகள் வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த எண்ணிக்கையானது இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கூடுதலாக 40 லட்சம் தடுப்பூசிகள் வரை கிடைக்கலாம். மேலும் செப்டம்பர் மாதத்தில் நடந்த சிறப்பு முகாம்கள் போல இந்த மாதமும் நடத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளன. இன்று நடக்கும் முகாமிற்கு ஏற்பாடுகள் செய்துள்ளோம். இதுவரை தடுப்பூசி போடாதவர்களுக்கு இந்த மாதம் போடுவதற்கான ஏற்பாடுகள் செய்து வருகின்றன.

Categories

Tech |