செம்பருத்தி சீரியல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்தவகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் ஒரு காலகட்டத்தில் மிகவும் ஹிட் தொடராக இருந்தது. குறிப்பாக இந்த சீரியலின் நாயகன்-நாயகி கார்த்திக்ராஜ் மற்றும் சபானா ஜோடிகள் இந்த சீரியலின் மூலம் மிகவும் பிரபலம் ஆகினர்.
ஆனால் சீரியல் நன்றாக ஓடிக் கொண்டிருந்த சமயத்தில் இதில் நடித்து வந்த கார்த்திக் ராஜ் திடீரென சீரியலை விட்டு விலகினார். இதைத் தொடர்ந்து இந்த சீரியலும் சற்று போர் அடிக்க தொடங்கியது. இன்னிலையில் செம்பருத்தி சீரியல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி வரும் அக்டோபர் 4ஆம் தேதி முதல் செம்பருத்தி சீரியலில் முதல் எபிசோடில் இருந்து மீண்டும் ஒளிபரப்பாக இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் காலை 8 மணி முதல் 9.30 மணி வரை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.