தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி முதல் பள்ளிகளில் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வாங்கிக் கொள்ளலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இதைப்பற்றி தேர்வு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் மாதம் 2021 ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்பு பொது தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்களை அனைத்து பள்ளி மாணவர்களும் அவர்கள் படித்த பள்ளியின் தலைமையாசிரியர் மூலமாக வருகின்ற 4 ஆம் தேதி காலை 10 மணி அளவில் வாங்கிக் கொள்ளலாம்.
மேலும் பள்ளிக்கு மதிப்பெண் சான்றிதழ்களை பெறுவதற்காக வரும் தேர்வர்கள் மற்றும் பெற்றோர்கள் கட்டாயம் முககவசம் மற்றும் சமூக இடைவெளியையும் கடைபிடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.