Categories
தேசிய செய்திகள்

ஒருதலை காதல் விவகாரம்…. “பேப்பர் கட்டரால் மாணவி கழுத்தை அறுத்து கொலை”… கல்லூரியில் நேர்ந்த கொடூர சம்பவம்…!!!

கேரளாவில் ஒருதலை காதலால் கல்லூரி மாணவி ஒருவர் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள செயின்ட் தாமஸ் கல்லூரியில் படித்து வருபவர் மாணவி நிதினா மோல் இவர் தேர்வு எழுதுவதற்காக நேற்று கல்லூரிக்கு சென்று உள்ளார். அப்போது அதே கல்லூரியைச் சேர்ந்த அபிஷேக் என்ற மாணவரும் தேர்வு எழுத வந்துள்ளார். இந்நிலையில் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அபிஷேக் பாதியிலேயே தேர்வை நிறுத்திவிட்டு கல்லூரி மண்டபத்தில் காத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தேர்வு முடிந்து நிதினா வெளியே வந்துள்ளார். அவரை பார்த்த அபிஷேக் அவரிடம் சண்டை இட்டுள்ளார். பின்னர் திடீரென அபிஷேக் பேப்பர்க்கட்டரை கொண்டு நிதினாவின் கழுத்தை அறுத்துள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் அங்கேயே நிதினா மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக மற்ற மாணவ மாணவிகள் சேர்ந்து அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார் அபிஷேக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு தலை காதல் விவகாரத்தால் கொலை நடந்திருக்கலாம் என போலீசார் தரப்பு தெரிவிக்கிறது.

Categories

Tech |