Categories
மாநில செய்திகள்

“குழந்தை மீட்பு பணி” களத்தில் தேசிய பேரிடர் மீட்பு குழு…….. நம்பிக்கையில் பொதுமக்கள்….!!

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித்தை  மீட்க்கும் பணியில் தற்போது தேசிய பேரிடர் மீட்பு குழு இணைந்துள்ளது.

திருச்சி மணப்பாறை பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளான். அவனை மீட்பதற்கு கடந்த இருபது மணி நேரமாக மீட்புக்குழு போராடி வந்துள்ளது. இதையடுத்து முதல் கட்டடங்களில் 26 அடியில் சிக்கியிருந்த குழந்தை மீட்பு பணியின் போது மணல் சரிந்து 70 அடியில் தற்போது சிக்கி தவித்து வருகிறது.

Related image

இந்நிலையில் பல்வேறு இடங்களிலிருந்து மீட்புக் குழுக்கள் நவீன கருவிகளுடன் குழந்தையை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அவர்களோடு சேர்ந்து 33 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் இணைந்து குழந்தையை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக மற்றும் மத்திய அரசின் தொடர் முயற்சியால் சுர்ஜித் மீண்டும் எழுந்து வந்து விடுவார் என்ற நம்பிக்கை அனைவர் மத்தியிலும் வியாபித்து காணப்படுகிறது.

Categories

Tech |