நாகை மாவட்டம் மேலவாஞ்சூர் பகுதியில் கார்த்திக் அரவிந்த் மற்றும் அபர்ணா என்ற இருவரும் வசித்து வந்துள்ளார்கள். இவர்களுக்குத் திருமணமாகி 4 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக அபர்ணா, தன் கணவரை விட்டு தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இதனை அடுத்து ஆட்டோ ஓட்டுனர் சுரேஷ் என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுவே நாள் போக்கில் காதலாக மாறி ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் இவரின் 4 வயது குழந்தையானது உயிரிழந்துள்ளது. இதில் தந்தை கார்த்திக் அரவிந்திற்கு தன் குழந்தையின் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் அபர்ணா மற்றும் சுரேஷை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். விசாரணையில் இருவரும் தனியாக இருந்த நேரத்தில் குழந்தை தொந்தரவாக இருந்ததன் காரணமாக அக்குழந்தையை கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.