திருப்பதியில் ரூபாய் 300 தரிசன டிக்கெட்டை ரூபாய் 5000க்கு விற்ற தேவஸ்தான அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்திற்காக நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அக்டோபர் மாதத்திற்கான ரூபாய் 300 மதிப்புள்ள 8000 டிக்கெட்டுகள் மற்றும் 8000 இலவச டிக்கெட்டுகள் அனைத்தும் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தரிசன டிக்கெட் இல்லாமல் வரும் பக்தர்கள் இடைத்தரகர்கள் மூலம் அதிக விலை கொடுத்து டிக்கெட்டுகளை வாங்கி தரிசனம் செய்கின்றனர் . இந்நிலையில் நேற்று முன்தினம் கர்நாடகாவைச் சேர்ந்த மூன்று பக்தர்களும் தெலுங்கானாவை சேர்ந்த நான்கு பக்தர்களும் திருப்பதியில் தரிசனத்திற்காக வந்தனர்.
ஆனால் அவர்கள் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யாத காரணத்தினால் பஸ் நிலையம் அருகே உள்ள டாக்சி டிரைவர் சுதர்சன் என்பவரிடம் டிக்கெட் குறித்து விசாரித்துள்ளனர். அவர் ஆட்டோ டிரைவர் சாய்குமார் மற்றும் சுதர்சன் ஆகியோரிடம் அழைத்துச் சென்றுள்ளார். பிறகு 300 ரூபாய் கட்டணம் உள்ள டிக்கெட்டை 7 பேருக்கு தலா 5000 வீதம் 35 ஆயிரம் ரூபாய்க்கு கொடுத்துள்ளார். இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து விசாரணையில் டாக்சி டிரைவர் சுதர்சன் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் சாய்குமார் சுதர்சனம் வங்கி ஊழியர் ஜெயச்சந்திரா திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் வேலை செய்து வந்த பிரசாத் கிரண்குமார், இன்டர்நெட் சென்டர் உரிமையாளர் மோகன்குமார், ஆகிய 7 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ரூபாய் 35 ஆயிரத்தை பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்த விசாரணையில் திருப்பதி தேவஸ்தான தலைவர் அலுவலகத்தில் வேலை செய்யும் ஊழியர்களை அதிக விலைக்கு டிக்கெட்டுகளை விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. இவ்வாறு இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.