சிறுமியை காதலிப்பதாகக் கூறி பலமுறை உல்லாசமாக இருந்ததால் வாலிபருக்கு நிதிமன்றம் சிறை தண்டனை வழங்கியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள தீவளூர் கிராமத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இந்நிலையில் சிறுமி பாட்டி வீட்டில் வசித்து வந்த நிலையில் யாரும் இல்லாத சமயத்தில் சதீஷ்குமார் அங்கு சென்று சிறுமியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அதன்பின் இது குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்த நிலையில் அவரை கண்டித்ததால் மன உளைச்சலில் சிறுமி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். பின்னர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்த நிலையில் சதீஷ் குமார் சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது பெற்றோருக்கு தெரிய வந்ததால் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். அதனால் இது தொடர்பாக சதீஷ் குமாரின் உறவினர்களுடன் பேசிய போது சிறுமியின் பெற்றோரை ஆபாச வார்த்தைகள் பேசி திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரியவந்துள்ளது.
இது குறித்து சிறுமி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சதீஷ்குமாரை கைது செய்துள்ளனர். இதனையடுத்து இந்த வழக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் அனைத்து விசாரணைகள் முடிவடைந்ததால் நீதிபதி எழிலரசி தீர்ப்பு வழங்கியுள்ளார். அந்த தீர்ப்பில் சதீஷ்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் மற்றும் 2,000 ரூபாய் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாநில அரசின் ஏதாவது ஒரு திட்டத்தில் இருந்து 30 நாட்களுக்குள் 5 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி எழிலரசி உத்தரவிட்டுள்ளார்.