கனடாவில் மக்கள் ப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பூசி பெற்றுக் கொள்ளுமாறு மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
உலக அளவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக மக்கள் தடுப்பு ஊசி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கனடாவில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி இருந்தாலும் மக்கள் ப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பூசியும் பெற்றுக் கொள்ளுமாறு மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஏனெனில் கடந்த ஆண்டில் ப்ளூ காய்ச்சல் தாக்கமானது குறைந்த அளவு காணப்பட்டுள்ளது. இதுபோன்று ஒரு ஆண்டில் ப்ளூ காய்ச்சலுக்கான தாக்கம் குறைவாக இருந்தால் அடுத்த ஆண்டில் அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ளனர். ஆகவே மக்கள் ப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறு மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.