Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பிறந்தநாள் விழா கொண்டாட்டம்…. பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்கள்…. போலீஸ் விசாரணை…!!

பிறந்தநாள் விழாவில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில்  மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்த  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

சென்னை மாவட்டத்திலுள்ள டி.பி.சத்திரத்தில் இருக்கும் சமுதாய நலக் கூடத்தில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டுள்ளது. இந்நிலையில் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட  இரு தரப்பினருக்கு  இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது.  அப்போது ஒருவரை ஒருவர் சரமாரியாக  தாக்கிகொண்டனர் . இதனையடுத்து மோதலில் ஈடுபட்டவர்கள் தெருவில் நின்ற 4 மோட்டார் சைக்கிள்களுக்கு நெருப்பு வைத்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறை உதவி கமிஷனர் ரமேஷ் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 2 பேரை கைது தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Categories

Tech |