அனைத்து திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை விமர்சனம் செய்பவராக நாம் தமிழர் கட்சி சீமான் இருப்பதாக அமைச்சர் பெரியகருப்பன் குற்றம் சாட்டியிருக்கிறார். மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்த பொருட்கள் விற்பனை கண்காட்சியை சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரமாக இருப்பதாக கூறினார்.
இதில் அவர் “அவர் விமர்சனம் செய்தார் என்பதை விட, அவர் விமர்சனம் எதைப்பற்றி செய்யாமல் இருக்கிறார்? என்பதை சொன்னீர்களேயானால் அது ஏற்புடையதாக இருக்கும். இதற்கு காரணம் எந்த ஒரு செயலுக்கும் எதிர்வினை ஆற்ற கூடியவராக அவர் இருக்கிறார். அது பற்றி பல ஆயிரக்கணக்கான அல்ல, லட்சக்கணக்கான அல்ல, இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரமாக இன்றைக்கு அது அமைந்திருக்கிறது”என்று கூறியிருந்தார்.