Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருமணமான ஒரே மாதத்தில்…. சடலமாக தொங்கிய புதுப்பெண்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருமணமான ஒரே மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை மாவட்டத்திலுள்ள அரும்பாக்கம் பகுதியில் எம்.எம்.டி.ஏ. காலனியில் திவ்யபாரதி என்பவர் வசித்து வந்துள்ளார்.  இந்த பெண் வளசரவாக்கத்தில் வசிக்கும் விஸ்வநாத் என்பவரை கடந்த 1-ஆம் தேதி அன்று பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் திவ்யபாரதி அரும்பாக்கத்தில் இருக்கும் தனது அம்மா வீட்டிற்கு வந்துள்ளார். இதனையடுத்து சோகமாக காணப்பட்டுள்ள திவ்யபாரதி தன் அறைக்கு சென்று நீண்ட நேரமாக  கதவை திறக்காமல் இருந்துள்ளார்.  இதனால் பதறிப்போன பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  கதவினை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.  அப்போது திவ்ய பாரதி தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.  அதன்பின் காவல்துறையினர் திவ்யபாரதியின்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  மேலும் திருமணமாகி ஒரே மாதத்தில் அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டதால் ஆர்டிஓ விசாரணைக்கு ஆணையிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |