இயக்குனர் மோகன் ஜி இயக்கிய ருத்ரதாண்டவம் படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்றுப்பை பெற்றுள்ளது. இந்த படம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள், தமிழ்நாட்டு இளைஞர்களை போதைப்பொருள் எவ்வளவு மோசமாக சீரழிக்கிறது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ருத்ரதாண்டவம் திரைப்படத்தை இயக்குனர் மோகன் உருவாகியிருப்பதாக அறிந்தேன். இன்றைய நிலையில் இது சமுதாயத்திற்கு தேவையான கருத்து! இதை வரவேற்போம்!
தமிழகத்தில் இரு வாரங்களில் 1000 கிலோ கஞ்சா பிடிபட்டிருக்கிறது. பெரும்பான்மையான கல்வி நிறுவனங்கள் மற்றும் விடுதிகளில் போதை தலைவிரித்தாடுகிறது. எனக்கு வேண்டியவரின் மகனே இதனால் பாதிக்கப்பட்டான். அத்தகைய போதை அரக்கனுக்கு எதிரான படத்தை படைத்தவருக்கு வாழ்த்துகள்! என பதிவிட்டுள்ளார்.
2. தமிழகத்தில் இரு வாரங்களில் 1000 கிலோ கஞ்சா பிடிபட்டிருக்கிறது. பெரும்பான்மையான கல்வி நிறுவனங்கள் மற்றும் விடுதிகளில் போதை தலைவிரித்தாடுகிறது. எனக்கு வேண்டியவரின் மகனே இதனால் பாதிக்கப்பட்டான். அத்தகைய போதை அரக்கனுக்கு எதிரான படத்தை படைத்தவருக்கு வாழ்த்துகள்!#SayNoToDrugs
— Dr S RAMADOSS (@drramadoss) October 1, 2021