Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்…. வழிப்பறியில் ஈடுபட்ட மர்மநபர்…. போலீஸ் விசாரணை….!!

பெண்ணிடம் தங்க நகை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ரகுமத் நகர் பகுதியில் ஒய்வு பெற்ற வங்கி அதிகாரியான சுந்தர்ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர் வீட்டு முன்பு காலையில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென மாரியம்மாளின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாரியம்மாள் கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து மர்ம நபரை பிடிக்க முயன்றனர். ஆனால் மர்ம நபர் நகையுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். மேலும் இதுகுறித்து மாரியம்மாள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |