கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி பகுதியில் இருக்கும் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு உள்பட பல பணிகளுக்கு அலுவலர்கள் மற்றும் சார்பதிவாளர் லஞ்சம் வாங்குவதாக புகார் வந்துள்ளது. அந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு துறை துணை காவல்துறை சூப்பிரண்டு தலைமையில் அதிகாரிகள் அங்கே சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது காவல்துறையினர் சோதனை செய்த நிலையில் கணக்கில் வராத 60 ஆயிரம் ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளது. இதனையடுத்து முக்கிய ஆவணம் மற்றும் 20,000 ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்து லஞ்சம் ஒழிப்புத் துறையின் அலுவலகத்திற்கு எடுத்து சென்ற நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.