எம்ஜிஆரை சீண்டுவது நெருப்போடு விளையாடுவது மாதிரி என்று அமைச்சர் துரைமுருகனுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கருணாநிதியை அடையாளம் காட்டியவர் எம்ஜிஆர்தான். எம்ஜிஆரை பற்றி பேசுவது நெருப்போடு விளையாடுவது மாதிரிதான். திமுக தலைவர் கருணாநிதியை முதலமைச்சராக அடையாளம் காட்டியதே புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தான். அவர் அன்று அடையாளம் காட்டவில்லை என்றால் இன்று துரைமுருகன் அமைச்சராகவோ, ஸ்டாலின் முதலமைச்சராகவோ இருக்க முடியாது.
அதேபோல திமுக கொடியையும், சின்னத்தையும் பட்டி தொட்டி எங்கும் பரப்பியவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். பஎம்ஜிஆர் இல்லை என்றால் திமுக ஆட்சிக்கு வந்திருக்க முடியாது. இப்படி புரட்சித் தலைவரால் பதவிக்கு வந்த திமுக, புரட்சித்தலைவர் கணக்குக் கேட்டார் என்ற ஒரு காரணத்திற்காக அவரை நீக்கிவிட்டு, அவரைத் துரோகி என்று சொன்னால், உண்மையிலேயே திமுக தான் துரோகக் கும்பல் என்று குற்றம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.